தீவிர குடும்ப நல சேவைகள் வழங்கும் முகாம்கள்

74பார்த்தது
தீவிர குடும்ப நல சேவைகள் வழங்கும் முகாம்கள்
பெரம்பலூர் மாவட்டம்
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு ஜூலை 11 முதல் ஜூலை 24 வரை தீவிர குடும்ப நல சேவைகள் வழங்கும் முகாம்கள் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு 12. 07. 2024 அன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி, செவிலியக்கல்லூரி மாணவிகளுக்கிடையே ஓவியப்போட்டி மற்றும் பரிசு வழங்குதல், மக்கள் தொகை தின உறுதிமொழி, மக்கள் தொகை தின விழிப்புணர்வு அலங்கார ஊர்தி மூலம் ஏற்படுத்துதல் போன்றவை நடைபெறுகின்றன.
பெரம்பலூர் மாவட்டத்தில் சுகாதார களப்பணியாளர்கள் மூலம் வாசக்டமி குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. இக்கருத்தடை சிகிச்சை அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செய்யப்படுகிறது.
எனவே, ஜூலை 11 முதல் ஜூலை 24, 2024 வரை பெரம்பலூர் மாவட்டத்தில் அம்மாபாளையம், வாலிகண்டபுரம், பூலாம்பாடி, லப்பைக்குடிகாடு, கொளக்காநத்தம் ஆகிய இடங்களில் நடைபெறும் தீவிர குடும்ப நல சேவைகள் வழங்கும் முகாம்களில் பொதுமக்கள் பங்குபெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி