கல்வியும் காவலும் என்ற மாணவர்களுக்கான விழிப்புணர்வு

75பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம் லப்பை்குடிக்காடு கிராமத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி தலைமையில் கல்வியும் காவலும்' என்ற மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மாவட்ட எஸ்பி மாணவிகளிடம் போதை பொருட்கள் உபயோகிப்பதனால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வுகள், போக்குவரத்து விதிகளை பின்பற்றுதல் முக்கியமாக தற்கொலைகள் போன்றவை குறித்த விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டது. பின்னர் மாணவிகளிடம் காவல்துறையில் இயங்கும் விரல்ரேகை பிரிவு, மோப்ப நாய்ப்படை பிரிவு, வெடிகுண்டு தடுப்பு பிரிவு, சைபர் குற்றங்கள் தடுப்பு பிரிவு ஆகிய பிரிவுகள் குறித்தும் அப்பிரிவுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாணவிகளிடம் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் பள்ளியில் இடைநின்ற மாணவர்களை அவர்களது பெற்றோர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி