பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் மற்றும் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா உத்தரவின்படி 12.03.2025-ம் தேதி பங்கேற்பாளர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் ராமராஜ், மற்றும் உதவி முதல்வர் ஸ்ரீரங்கன் ராசாத்தி (வட்டார வளமைய பயிற்றுநர் வேப்பூர் ஒன்றியம்) பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மருதமுத்து, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மருத்துவர் Dr. வனிதா மற்றும் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு ஆலோசகர் தென்றல், மற்றும் மீரா ஃபவுண்டேசன் நிறுவனர் ராஜா முகமது, ஆகியோர்கள் வேப்பூரில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியின் 70 ஆசிரியர்களுக்கு போக்சோ சட்டம், மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுத்தல், குழந்தைகள் எதிரான வன்முறை தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் மற்றும் பயிற்சி நடைப்பெற்றது.