குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

74பார்த்தது
குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளாதேவி உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ஜென்னட் ஜெசிந்தா மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் மருதமுத்து, மற்றும் ரேகா (one stop center ) மகாராணி (சமூகநலத்துறை MS) லட்சுமி (சமூகநலத்துறை GS) ராஜேஷ் (மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு) ஆகியோர்கள் இணைந்து லப்பைக்குடிக்காட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளிடையே பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடத்தினார்கள். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளிடம் பேசிய காவல் ஆய்வாளர் அவர்கள் குழந்தை திருமணம், போக்சோ சட்டம், கல்வியின் முக்கியத்தும், பெண்கல்வியின் அவசியம், பள்ளியில் இடைநின்ற மாணவ மாணவிகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது ஆகியவை குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

டேக்ஸ் :