கணவனைக் கண்டுபிடித்து தர வேண்டி கர்ப்பிணி மனு

3963பார்த்தது
வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டு தலை மறைவாக உள்ள கணவனைக் கண்டுபிடித்து சேர்த்து வையுங்கள். 2  பிள்ளைகளுடன், 6 மாத கர்ப்பிணி பெண் பெரம்பலூர் மாவட்டக் ஆட்சியரிடம் புகார் மனு.

பெரம்பலூர் மாவட்டம், காடூர் கிராமம், கிழக்கு தெருவை சேர்ந்த ராஜ்கமல் மனைவி காயத்ரி- 27, 6 மாத கர்ப்பிணியான இவர், தனது 2 மகன்களுடன், கண்ணீர்மல்க மாவட்ட ஆட்சியர் கற்பகத்தை சந்தித்து புகார் மனு அளித்தார். அதில், நான் காடூர் கிராமத்தில் வசித்து வருகிறேன். கடந்த 2017 ஆம் ஆண்டு, பிப்ரவரி 9 ஆம் தேதி கடலூர் மாவட்டம், மண்ணம்பாடி கிராமத்தைச் சேர்ந்த எனக்கும், பெரம்பலூர் மாவட்டம், காடூர் கிராமத் தைச் சேர்ந்த ராஜ்கமல் என்பவருக்கும் திருமணம் ஆனது. எங்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். தற்போது நான் 6 மாத கர்ப்பிணையாக உள்ளேன். இந்நிலையில், எனது கணவர் ராஜ்கமல் என்னை விட்டு விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து தலை மறைவாக உள்ளார். அவரை கண்டு பிடித்து ஒன்றாக சேர்த்து வைக்கும்படி மங்களமேடு காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. என் பிள்ளைகளுக்கும், எனக்கும் வழி ஏதும் சொல்லாமல், எங்களை விட்டுவிட்டு, சென்று விட்டார். எனவே தலை மறைவாக உள்ள எனது கணவரை கண்டுபிடித்து எங்களை ஒன்றாக சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி