புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அடுத்த புனல் குளத்தை சேர்ந்தவர் சுதாகர் (40). இவர் புனல் குளம் மளிகை கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு பின்னால் பைக்கில் வந்த ராஜ்குமார்(35 ) மோதியதில் சுதாகருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் அளித்த புகாரில் கந்தர்வகோட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.