பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் பெரம்பலூர் செயற்பொறியாளர் மின் அலுவலகத்தில் ஜூலை 8ஆம் தேதி காலை 11 மணிமுதல் மதியம் 1 மணிவரை நடைபெறவுள்ளது. இக்கூட்டமானது பெரம்பலூர் வட்ட மேற்பார்வைப் பொறியாளர் மேகலா தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும் எனப் பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.