புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் அடுத்த பேயடிகோட்டையை சேர்ந்தவர் துரைசாமி (72). இவருக்கு திருமணம் ஆகி 40 வருடமான நிலையில் மூன்று மகள்களும் இரண்டு மகனும் உள்ளனர். இதனை அடுத்து நேற்று மது போதையில் இருந்த அவர் பேயடிக்கோட்டை அய்யனார் கோவில் குளத்தில் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரில் திருப்புனவாசல் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.