பெப்பினோ மெலன் பழம் பார்ப்பதற்கு தர்ப்பூசணி பழத்தைப் போல மேலே கோடுகளோடு, மஞ்சள் நிறத்தில் இருக்கும். கொலம்பியா, பெரு நாடுகளில் அதிகமாக விளைகிறது. இனிப்பு சுவையுடைய பெப்பினோ மெலன் வைட்டமின் ஏ, சி, கே, பி மற்றும் புரதச்சத்துகள் நிறைந்தது. இதில் இருக்கும் கால்சியம் எலும்புகளை உறுதிப்படுத்தும், பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது அதிமருந்தாகும்.