தென் சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட அதிமுக சார்பில், அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். அதற்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “அதிமுக நடத்திய போராட்டத்தை அராஜகப் போக்குடன் எதற்கு ஒடுக்க வேண்டும்?. மக்கள் எண்ணமே எதிர்க்கட்சியின் குரல். அதை ஒடுக்கும் ஆணவ அரசின் கொட்டத்தை மக்கள் நிச்சயம் அடக்குவார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.