உத்தரப்பிரதேச மாநிலம் பெற்றோர்களால் தூக்கி வீசப்பட்டு மரத்தில் தொங்கியபடி காயங்களுடன் இருந்த பிறந்த 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை மீட்டு காப்பாற்றியவர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். 50க்கும் மேற்பட்ட காயங்களுடன் இருந்த குழந்தை 2 மாத சிகிச்சைக்கு பிறகு தற்போது நலமுடன் உள்ளது. ஜென்மாஷ்டமி அன்று குழந்தை கண்டெடுக்கப்பட்டதால் அதற்கு கிருஷ்ணா என பெயர் சூட்டியுள்ளனர்.