தங்க நகைகளை அடகு வைத்து ஓராண்டுக்குள் திருப்ப வேண்டும், நகைகள் ஆதாரம் வழங்க வேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் விதிமுறை காரணமாக, மக்கள் கந்துவட்டி பக்கம் திரும்பும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் ஜார்ஜ் அலெக்ஸாண்டர் தெரிவித்துள்ளார். தங்க நகைக்கடன் வழங்க கட்டுப்பாடுகளை அறிவித்த ரிசர்வ் வங்கிக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், முத்தூட் பைனான்ஸ் இயக்குனரும் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.