பொது விநியோகத் திட்டத்தின் மக்கள் குறைதீர் முகாம்!

69பார்த்தது
பொது விநியோகத் திட்டத்தின் மக்கள் குறைதீர் முகாம்!
தமிழ்நாடு முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் மக்கள் குறைதீர் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் வருகிற 13ஆம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மற்றும் கைபேசி எண்பதிவு உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும். நியாய விலை கடைகளில் பொருள் பெற இயலாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகார சான்று வழங்கப்படும்.

தொடர்புடைய செய்தி