தமிழ் சினிமாவின் மகத்தான நடிகரான விஜய் சேதுபதி இன்று (ஜன. 16) தனது 47வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். கூட்டத்தில் தோன்றும் துணை நடிகர் கதாபாத்திரங்கள், சீரியல்கள், டப்பிங் பணிகள் என சினிமா சார்ந்தே தொடர்ந்து இயங்கியவர் தனது திறமை மற்றும் கடினமான உழைப்பால் இன்று நாடு முழுவதும் அறிந்த புகழ்பெற்ற நடிகராக விளங்கி கொண்டிருக்கிறார். மேன்மேலும் அவர் திரைத்துறையில் உச்சம் தொட வாழ்த்துவோம்.