உதவி கேட்ட மக்கள்.. ஓடோடி சென்ற பாலா!

55பார்த்தது
உதவி கேட்ட மக்கள்.. ஓடோடி சென்ற பாலா!
'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலா தன்னால் முடிந்த பல உதவிகளை செய்துவருகிறார். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே கோட்டகயப்பாக்கம் கிராமத்திற்கு ரூ.3 லட்சம் மதிப்புள்ள தண்ணீர் சுத்திகரிக்கும் கருவியை பாலா வழங்கியுள்ளார். குடிநீரில் சுண்ணாம்பு அதிகமிருப்பதால் சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் பாலாவிடம் மனு அளித்திருந்தனர். மனு கொடுத்த 10 நாட்களுக்குள் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி வாங்கி கொடுத்திருக்கிறார் பாலா. இவரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.