மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "திமுகவினர் என்ன சர்க்கஸ் செய்தாலும் மக்கள் நம்ப போவதில்லை. திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள். 2026இல் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெறும்" என்றார். முன்னதாக நேற்று நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை முதல்வர் கடுமையாக விமர்சித்தார்.