பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு முற்றியுள்ளது. இந்த நிலையில், அக்கட்சியின் நிர்வாகிகள் கடந்த சில தினங்களாக சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றும் (ஜூன் 6) இருவரிடையே பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது. குறிப்பாக முன்னாள் ரயில்வே மத்திய இணை அமைச்சர் வேலு, கட்சியின் முன்னாள் மாநில துணைப் பொதுச் செயலாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் ராமதாஸுடன் ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.’