IPL 2025 சீஸனின் இறுதி யுத்தம் இன்று (ஜூன் 3) அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் மழையின் குறுக்கீடு இருக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, அகமதாபாத்தில் மதியம் 66%, மாலை 5% மழை பெய்ய வாய்ப்புள்ளது. அங்கு மேகங்கள் 33% சூழ்ந்துகொள்ளும் வாய்ப்பு இரவில் ஏற்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.