ஐபிஎல் 2025 இறுதிப்போட்டிக்குள் நுழைய, இன்று (ஜூன் 1) நடைபெறும் குவாலிபயர் 2 ஆட்டத்தில் ஒரு அணி கட்டாயம் வெற்றிபெற வேண்டும். அகமதாபாத் மைதானத்தில் நடந்த போட்டியில் இதுவரை தோல்வி அடையாத பஞ்சாப் அணியும், வெற்றி அடையாத மும்பை அணியும் நேருக்கு நேர் மோதுகின்றது. இந்தப்போட்டியில் வெற்றிபெறும் அணி IPL 2025 இறுதிப்போட்டியில் RCB அணியை எதிர்கொள்ளும். இதுவரை 5 கோப்பைகளை வென்றுள்ள மும்பை தனது வெற்றியை தொடருமா? அல்லது பஞ்சாப் வரலாறு படைக்குமா? என்பதை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.