தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) கடிதம் அனுப்பியுள்ளது. அதில், “தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் தங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படும் போதெல்லாம், 'பெப்சி' தங்கள் எதிரி என்ற பிம்பத்தை உருவாக்குகின்றனர். இணக்கமாக பணிபுரிய நாங்கள் பேசி வரும் நிலையில், நீங்கள் சம்மேளனத்தைப் பற்றி அவதூறு பேசுகிறீர்கள். எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு” என எச்சரித்துள்ளது.