விமானத்தில் இருந்து குதித்த பயணிகள்.. ஷாக் வீடியோ

4பார்த்தது
ஸ்பெயினில், விமானம் ஒன்று புறம்படும் நேரத்தில், தீ எச்சரிக்கை ஒலித்ததால் பயணிகள் தங்கள் உயிரைக் காப்பாற்ற விமானத்தின் இறக்கைகளில் இருந்து குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பால்மா டி மல்லோர்கா விமான நிலையத்திலிருந்து மான்செஸ்டருக்கு புறப்படத் தயாராக இருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. உடனடியாக அங்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, அவசர கதவுகள் வழியாக பயணிகளை வெளியேற்ற முயற்சித்தனர். இருந்தபோதிலும், தங்களது உயிரை காப்பாற்ற, பயணிகள் விமானத்தில் இருந்து குதித்தனர்.

நன்றி: X

தொடர்புடைய செய்தி