அமெரிக்கா: நீச்சல் கற்றுக் கொடுப்பதாக 2 வயது குழந்தையை பலமுறை நீச்சல் குளத்தில் தள்ளி கொலை செய்த பெற்றோரை போலீசார் கைது செய்தனர். குழந்தையின் தாய் அன்னஸ்டாசியா அட்கின்ஸ் மற்றும் வளர்ப்பு தந்தை டகோட்டா ஷான் ஹேஸ் ஆகிய இருவரும் குழந்தை நீச்சல் அடிக்க தயக்கம் காட்டிய போதும் கட்டாயப்படுத்தியது தெரியவந்தது. இது குறித்து குழந்தையின் சகோதரியான 6 வயது சிறுமி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.