ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், ஜைசால்மர் நகரை குறிவைத்து பாகிஸ்தான் நேற்று (மே 8) டிரோன் தாக்குதலை முன்னெடுத்தது இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டது. இந்நிலையில், ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். ஆலோசனைக்கு பின்னர் அம்மாநில அரசு ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. நகர்ப்புற மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக ஆலோசனை நடந்துள்ளது. ராணுவ நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.