பாகிஸ்தான் சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இந்தநிலையில் தற்போது அங்கு அந்த நாட்டு மதிப்பில் லிட்டருக்கு பெட்ரோல் ரூ.1 மற்றும் டீசல் ரூ.7 உயர்த்தப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்மூலம் பெட்ரோல் ரூ.257, டீசல் ரூ.267 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு இந்த விலை உயர்வு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.