பயங்கரவாதிகளுக்கு பாக்., ராணுவ மரியாதை

60பார்த்தது
பயங்கரவாதிகளுக்கு பாக்., ராணுவ மரியாதை
பாகிஸ்தானில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டுள்ளது என வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்சி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மீதான நடவடிக்கை குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த விக்ரம் மிஸ்சி, "இந்தியாவால் கொல்லப்பட்டவர்கள் அனைவருமே பயங்கரவாதிகள்தான். அவர்களுக்கு பாகிஸ்தான் ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தியுள்ளது" என்று கூறியவர், இறுதிச்சடங்கில் பாக். ராணுவ அதிாரிகள் பங்கேற்ற படத்தை காண்பித்தார்.

தொடர்புடைய செய்தி