விமானப்படை தளத்தை இந்தியா தாக்கியது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளார். இஸ்லாமாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஷபாஸ் ஷெரீப், "மே.10-ம் தேதி இரவு சுமார் 2.30 மணியளவில் ராணுவத் தலைவர் அசிம் முனீர், என்னை தொடர்புகொண்டு இந்திய ஏவுகணைகள் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படை தளத்தை தாக்கியதாக தகவல் தெரிவித்தார். அதன்பின், 2-வது முறையாக என்னை தொடர்பு கொண்டு இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பதிலடி கொடுத்ததாக தெரிவித்தார்" என்று கூறியுள்ளார்.