பஹல்காம் தாக்குதல்.. முப்படை தளபதிகளுடன் பிரதமர் ஆலோசனை

70பார்த்தது
பஹல்காம் தாக்குதல்.. முப்படை தளபதிகளுடன் பிரதமர் ஆலோசனை
பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்.29) அவசர ஆலோசனை மேற்கொண்டார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து காஷ்மீரின் பல்வேறு பகுதிகளிலும் ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையை தொடர்ந்து வருகிறது. எல்லையில் இருநாட்டு படையினரும் குவிக்கப்பட்டு வரும் நிலையில், பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் ராணுவ தளபதிகள் ஆலோசனை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி