ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் மற்றொரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு சுற்றுலாப் பயணி ஜிப் லைனில் செல்லும் போது எடுத்த செல்ஃபி வீடியோவில் இத்தாக்குதலின் கோர காட்சிகள் பதிவாகியுள்ளன. அவர் மேலே உள்ள ஜிப் லைனில் சென்று கொண்டிருந்தபோது, கீழிருந்த சுற்றுலாப் பயணிகள் அலறி ஓடியுள்ளனர். துப்பாக்கிச் சூடு சத்தங்களும் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளன. மேலும் ஒரு நபர் குண்டடிப்பட்டு கீழே விழும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.