17 கோடி மக்களை பிரதமர் வந்தேறிகள் என்கிறார் - ஓவைசி

84பார்த்தது
17 கோடி மக்களை பிரதமர் வந்தேறிகள் என்கிறார் - ஓவைசி
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி வெறுப்புணர்வை பரப்புகிறார் என ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்கள் வந்தேறிகள் என்று மோடி கூறியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஓவைசி, 133 கோடி இந்தியர்களின் பிரதமரான மோடி, 17 கோடி மக்களை வந்தேறிகள் என்று சொல்கிறார். மோடி ஏன் இஸ்லாமிய சமூகத்தை அவமதிக்கிறார்? இஸ்லாமிய சமூகத்தின் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு. நாங்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை என்றால், இஸ்லாமியர்கள் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்க மாட்டார்கள். இப்படி வாய்க்குவந்தபடி பேச மோடிக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? என சாடியுள்ளார்.

தொடர்புடைய செய்தி