சாதிப் பெயர்களை 4 வாரங்களில் நீக்க உத்தரவு

58பார்த்தது
சாதிப் பெயர்களை 4 வாரங்களில் நீக்க உத்தரவு
கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்களை 4 வாரங்களில் நீக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாதிப் பெயர்களை நீக்காவிட்டால் அக்கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும்  அரசு நடத்தும் கள்ளர் சீர்திருத்தப் பள்ளி, ஆதிதிராவிடர் நலப் பள்ளி ஆகியவற்றின் பெயரை அரசுப் பள்ளி என்று மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க தேர்தல் தொடர்பான சர்ச்சை குறித்த வழக்கின் தொடர்ச்சியாக இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி