கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 2ஆம் தேதி திறக்கப்படுகின்றன. பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், சீருடை, பேக், காலணிகள், மற்றும் பிற கற்றல் உபகரணங்கள் (வண்ணப் பென்சில்கள், கணித உபகரணப் பெட்டிகள்) உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதில் தாமதம் ஏற்படக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.