சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளி கொலை செய்த வழக்கில்,
தூக்கு தண்டனை கைதி சதீஷை வருகிற 29ஆம் தேதி காணொலி வாயிலாக ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யபிரியாவை, சதீஷ் என்பவர் ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்தார். இவருக்கு தூக்குத் தண்டனை விதித்து கடந்த டிச., 30ஆம் தேதி அல்லிகுளம் மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.