ஆரஞ்சு பழத்தின் தோல்களில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் கால்சியம் உள்ளதால் அவை பல் ஆரோக்கியத்திற்கு அதிகம் நன்மை செய்கிறது. ஆரஞ்சு தோல்களை வெயிலில் உலர வைத்து பின்னர் மிக்ஸியில் பொடியாக அரைத்து காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும். இந்த பொடியை தினமும் பல் துலக்கும்போது பற்பொடியாகவோ அல்லது பற்பசையுடன் கலந்தோ பயன்படுத்தலாம். இது பற்களில் படிந்திருக்கும் கறைகளை படிப்படியாக நீக்கும்.