4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்

17866பார்த்தது
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்
தென்மேற்கு வங்கக்கடலில் நாளை (மே 22) காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி உருவாகக் கூடும் என்றும், இது வடகிழக்குத் திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடலில் 24ஆம் தேதி காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இன்று (மே 21) கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதே போல், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி