தமிழகம் வருகை தரும்
பிரதமர் நரேந்திர மோடியை இன்று திருச்சி விமான நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க உள்ளார். திருச்சி விமான நிலைய திறப்பு விழாவுக்கு வருகை தரும் மோடியை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி முறிந்த நிலையில், ஓபிஎஸ் உடன்
பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடி வருகையையொட்டி, திருச்சியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்றைய நிகழ்ச்சிகளில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.