பரபரப்பான
அரசியல் சூழலுக்கு மத்தியில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடுகிறது. இந்நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகருடன் சந்தித்து கவன ஈர்ப்பு தீர்மானங்கள் அளித்துள்ளதுடன், எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாகவும் மண்டும் சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளனர். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்க வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து கோரிக்கை வைத்த நிலையில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஓ.பன்னீர்செல்வமே அந்த இருக்கையில் அமர்ந்துள்ளார்.