எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை பற்றி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய சபாநாயகருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். பலமுறை தங்களிடம் நேரில் வலியுறுத்தி சொல்லி இருக்கிறோம் பேரவை மரபுப் படி எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை எதிர்க்கட்சித் தலைவர் அருகே இருக்க வேண்டும் என்பது மரபு என்றும், அதை நிறைவேற்றி தர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் வலியுறுத்தி பேசியிருந்தார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தற்போது அளிக்கப்பட்டுள்ள இடத்தை மாற்றி அங்கு, எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.