பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்த, மாலத்தீவு இளைஞர் விவகார அமைச்சர் மரியம் ஷிவுனா உட்பட 3 அமைச்சர்களை மாலத்தீவு அரசு இடைநீக்கம் செய்துள்ளது. வெளிநாட்டுத் தலைவர்களுக்கு எதிரான மோசமான கருத்துக்கள் அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல என்று மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மோடியின் சமீபத்திய லட்சத்தீவு பயணத்தின் படங்களைப் பகிர்ந்த அமைச்சர் மரியம் ஷிவுனா, மோடி ஒரு
கோமாளி என்றும் இஸ்ரேலின் கைப்பாவை என்றும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இவரது கருத்து, இராஜதந்திர உறவுகளை பாதிக்கும் நிலையை எட்டியதை அடுத்து மாலத்தீவு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மோடியை அவமதித்த அமைச்சர்கள் ஹசன் சிஹான், மல்ஷா ஆகியோரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.