'ஆப்ரேஷன் சிந்தூர்' நடவடிக்கை தொடர்கிறது என இந்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், " 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை இன்னும் தொடர்கிறது. துல்லியமான தாக்குதல்களில் சுமார் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் ஏதேனும் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டால் இந்தியா பின்வாங்காது. பாகிஸ்தான் தாக்கினால் இந்தியா திருப்பித் தாக்கும்" என்று உறுதிப்பட தெரிவித்துள்ளார்.