கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த குமரன் நகரில் உள்ள வீட்டில் வசிக்கும் குடும்பத்தினர் கதவைத் திறக்க முடியாமல் இன்று (டிச.23) உள்ளேயே சிக்கிக்கொண்டனர். நீண்ட நேரமாக வெளியே வரமுடியாமல் தவித்தனர். அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கதவை உடைத்து 2 பெண்கள் மற்றும் ஒரு பள்ளி மாணவனை மீட்டனர். மேலும் அந்த மாணவனை சரியான நேரத்திற்கு தேர்வு எழுத பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.