நீலகிரி: ஊட்டியில் ஐந்து நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று கோவை விமான நிலையம் வந்த முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஐந்து நாட்கள் சுற்றுப்பயணமாக ஊட்டிக்குச் சென்றார். மேலும் அங்கு மசனகுடியில் உள்ள யானைகள் முகாம், பழங்குடியினர் சந்திப்பு, நலத்திட்ட உதவிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். ஐந்து நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்ட முதலமைச்சர் இன்று சென்னை புறப்பட்டார்.