ஆன்லைன் திரைப்பட விமர்சனங்கள் - கேரள கோர்ட் நோட்டீஸ்

74பார்த்தது
ஆன்லைன் திரைப்பட விமர்சனங்கள் - கேரள கோர்ட் நோட்டீஸ்
ஆன்லைன் திரைப்பட விமர்சகர்கள், சினிமா தொடர்பான சமூக வலைதளப் பதிவாளர்களுக்கு திரைப்படத்தை விமர்சனம் செய்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரிய மனு மீது விளக்கம் அளிக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மற்றும் திரைப்பட தணிக்கை குழுவுக்கு (CBFC) கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ஒரு திரைப்படத்தை சரியாக மதிப்பிடாமல், எதிர்மறையாக விமர்சிப்பது அதன் வசூலை மோசமாக பாதிக்கும். சில நேரங்களில் தோல்விப்படமாக்கப் படுகிறது, இது சினிமாதுறையினரின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கிறது என மனுதாரர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திரைப்படம் வெளியாகி 7 நாட்கள் கழித்து விமர்சனம் செய்ய உத்தரவிட கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி