இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டே ஆன்லைன் விளையாட்டுகளுக்கு நேரக்கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது என ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆன்லைன் விளையாட்டால் ஏற்பட்ட பண நஷ்டம் காரணமாக 2019 முதல் 2024 வரை தமிழகத்தில் 47 பேர் தற்கொலை செய்துள்ளனர். தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்த 2022ல் தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இயற்றப்பட்டடு அரசிதழில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. வழக்கின் இறுதி விசாரணை மார்ச் 27ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.