ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஃபிளிப்-ஸ்டைல் ஃபோல்டபிள் மொபைல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் ஓபன் 2 மாடலானது வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான சப்போர்ட்டுடன் கூடிய 5,700mAh பேட்டரி பேக்கை கொண்டிருக்கக் கூடும் என தகவல் கசிந்துள்ளது. மேலும், இதில் 50MP பிரைமரி சென்சார், அல்ட்ரா-வைட் லென்ஸ், ஆப்டிகல் ஜூம் திறன்களுடன் கூடிய பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ சென்சார் இருப்பதாக கூறப்படுகிறது.