ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (NCTE) ஒரு வருட பி.எட் (B.Ed) மற்றும் எம்.எட் (M.Ed) படிப்புகளை மீண்டும் கொண்டு வர திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, இந்த படிப்புகளின் கால அளவை இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஓராண்டாக மாற்றப்பட உள்ளது. இந்த மாற்றம், 2026-27ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. இது தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ஆசிரியர் பணிக்கான விரைவான வழிகளை மீண்டும் வழங்குகிறது.