இன்றைய (ஆகஸ்ட் 6) தினம் மாலை 6:30 மணிக்கு மேலாக 7:15 மணிக்குள் பிறை நிலவு தெரியும். அப்போது அம்பாள், சிவன் போன்ற தெய்வங்களை மனதில் நினைத்து வழிபட்டால் கேட்ட வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆடி மாத சந்திர தரிசனம் செய்வதால் மேலும் ஒரு முக்கிய பலன் கிடைக்கிறது. அதன்படி, காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களையும் கடந்தவன் முக்தி அடையலாம். இதை நினைவுபடுத்துவதற்கே முன்னோர்கள் பிறை நிலவை காணவேண்டும் என்று கூறினார்கள்.