பள்ளம் தோண்டும் போது ஒருவர் மாரடைப்பால் மரணம்

65பார்த்தது
பள்ளம் தோண்டும் போது ஒருவர் மாரடைப்பால் மரணம்
புதுக்கோட்டை: வல்லத்திராகோட்டை அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பரமசிவம் (55) என்பவர் நேற்று அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரது நிலத்தில் பள்ளம் தோண்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து மனைவி சவுந்தரி அளித்த புகாரின் பேரில் வல்லத்திராகோட்டை காவல் நிலைய எஸ்ஐ கூத்த பெருமாள் விசாரணை மேற்கொண்டுள்ளார்.