தண்டவாளத்தில் தூங்கியவர்கள் மீது ரயில் மோதியதில் ஒருவர் பலி

74பார்த்தது
தண்டவாளத்தில் தூங்கியவர்கள் மீது ரயில் மோதியதில் ஒருவர் பலி
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தண்டவாளத்தில் படுத்து தூங்கிய இளைஞர்கள் மீது ரயில் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். உடன் படுத்திருந்த இருவர் படுகாயம் அடைந்தனர். வடமழை மணக்காடு கிராமத்தில் நேற்றிரவு கோவில் திருவிழா முடிந்த பிறகு, அதிகாலையில் 3 இளைஞர்கள் அங்கிருந்த தண்டவாளத்தில் படுத்து தூங்கியுள்ளனர். காலை 5 மணிக்கு ரயில் அவர்கள் மீது மோதியதில் குமார சாரதி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருவர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி