தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டிருந்த 25 வயது இளைஞர் உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது தெரியவந்துள்ளது. ஏற்கனவே 60 வயது முதியவர் நுரையீரல் தொற்றால் உயிரிழந்த நிலையில், அவருக்கும் கொரோனா தொற்று இருந்தது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.