கேரள மாநிலத்தில் மழை காரணமாக பைக் வழுக்கிச் சென்று அரசுப் பேருந்து மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பத்தனம்திட்டா பகுதியில் மழையால் ஏற்பட்ட பள்ளத்தில் இறங்கிய பைக் கட்டுப்பாட்டை இழந்து, நேராக பேருந்தின் மீது மோதியது. இதில், பைக்கில் சென்ற நபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இதுகுறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.